மேரி கொல்வின்
வாய்க்குள் நுழையாதது உன் பெயர் - ஆனால்
எப்படி என் இதயம் நுழைந்தாய்
உண்மையில் நீ துணிச்சலான பெண் தான்
ஒற்றைக் கண் பார்வையிழந்த போதும் பணிக்குச் சென்றவள் நீ
இது தான் என் இதயம் உன்னை உள் வாங்கக் காரணமா??
சிந்தித்து சிந்தித்து சிந்தை கலைகிறது எனக்கு
எண்ணும் எழுத்தும் இரண்டு கண்கள் என்பார்கள் - ஆனால்
இதில் நீ எதை இழந்திருந்திருந்தாலும் உன் பணியைத் தொடர்ந்திருக்க முடியாது
56 வயதிலும் மாறாத உன் இளமை
இது தான் நீ என் உள்ளம் நுழையக் காரணமா?
ஊடகங்கள் உன்னைப் பற்றி எழுதியதால்
என் உள்ளம் நுழைந்தாயா?
உன் ஒற்றைக் கண்ணைப் பறித்தது
எங்கள் நாட்டு யுத்தம் உள்ளே வலிக்கிறதே…..
ஒரு வேளை இது தான் காரணமாக இருக்குமோ??.....
அமெரிக்காவில் பிறந்தவளே!
துணிச்சல் அதிகம் தான் உனக்கு
சிரியாவில் உயிரிழந்தாய்…… யுத்தத்தில்
உனக்கு கிடைத்த விருதுகள் மிகவும் உயர்ந்தவை – ஆனாலும்
உன் பணிக்கு அவை ஏதும் நிகர் ஆகிவிட முடியாதுஎன்பதை அறியும் சமூகம்
உன் இறுதி மூச்சு நிற்கும் வரை
இடை விடாது பணி புரிந்ததால் தான்
என் உள்ளம் புகுந்தாயா ? புரியவில்லை எனக்கு
நீ பயணித்த ஊடகப் பாதையில் தடம் பதிக்க இருப்பதால் தானோ!
என் உள்ளம் புகுந்தாய்
செய்யும் தொழிலே உலகம் என்று இருந்தவளே
உன்னை மறக்குமோ இந்த உலகம்?????


